வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ஆம் தேதி தொடங்க வாய்ப்பு
தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் 4-வது வாரத்தில் துவங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வழக்கத்தை விட இந்தமுறை அதிகமான புயல்கள் உருவாக வாய்ப்பு உள்ளது என்றும் கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிக மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. இதனால் தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
வட கிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது.
Tags :



















