தனியார் பின்னலாடை நிறுவனத்தில் துணை மேலாளர்-தற்கொலை ஆன்லைன் சூதாட்டம் காரணமா..?

கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி சிங்காநல்லூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி,
இவர் கோபிசெட்டிபாளையம் அருகே கொலப்பலூரில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் துணை மேலாளராக வேலை செய்து வருகிறார்.
கிருஷ்ணமூர்த்திக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாகவும், ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி அவரது வீட்டின் அருகே இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து கிருஷ்ணமூர்த்தின் பெற்றோர்கள் ஆன்லைன் சூதாட்டத்தில் 5 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதே தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் என திங்களூர் காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் திங்களூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தி தற்கொலைக்கு ஆன்லைன் சூதாட்டம் காரணமாக என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags : ஆன்லைன் சூதாட்டம்