விஜய் ஆண்டனியின் மகள் மறைவு - திமுக எம்.பி இரங்கல்

by Staff / 19-09-2023 04:44:46pm
விஜய் ஆண்டனியின் மகள் மறைவு - திமுக எம்.பி இரங்கல்

நடிகர் விஜய் ஆண்டனி மகள் மீராவின் மறைவிற்கு திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில், இசையமைப்பாளரும், நடிகருமான திரு.விஜய் ஆண்டனியின் மகள் மீரா மரணம் அடைந்த செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன். கடந்த, ஜூன் மாதம், சென்னை - சர்ச் பார்க் பள்ளியில் நடந்த மாணவர் தலைவர்களுக்கான பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டு, கலைநிகழ்ச்சி குழுவின் தலைவராக மீராவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தேன். மீராவின் இந்த முடிவு, மிகுந்த மன வேதனையை அளிக்கின்றது. எனது ஆழ்ந்த இரங்கலும், அனுதாபமும் என அவர் பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via