பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆட்சியை பிடித்தது இம்ரான்கான் கட்சி

by Admin / 27-07-2021 02:55:26pm
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆட்சியை பிடித்தது இம்ரான்கான் கட்சி



பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கான் கட்சி ஆட்சியைப் பிடித்து இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 53 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 53 இடங்களில் 8 இடங்கள் நியமன உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள சூழலில், மீதமுள்ள 45 இடங்களுக்கு தேர்தல் நடந்தது.

கடுமையான வன்முறைகள் மற்றும் மோசடி புகார்களுக்கு மத்தியில் இந்தத் தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தலின் போது நடந்த வன்முறையில் 2 பேர் பலியாகினர். போலீசார் உள்பட பலர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், வாக்குப்பதிவு முடிவடைந்ததும் உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி 23 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

இந்தத் தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி 10 இடங்களைக் கைப்பற்றி 2-வது இடத்தைப் பிடித்தது. அதேசமயம் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (நவாஸ்) வெறும் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

 

 

Tags :

Share via

More stories

Logo