விபத்தில் சிக்கிய மாணவனை காப்பாற்றிய செவிலியருக்கு பாராட்டுகள் குவிகிறது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில், நெடுவாக்கோட்டை அருகில் சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் அடிப்பட்ட நிலையில் கிடந்தார் கருவாக்குறிச்சியை சேர்ந்த மாணவன் வசந்த்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த மாணவனை 108 அவசர ஊர்தி வருவதற்குள் முதலுதவி செய்து உயிரை காப்பாற்றிய செவிலியர் சகோதரி வனஜா.இவர் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார்.சாலையில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மாணவனை எவ்வித தயக்கமும் இன்றி உடனடியாக முதலுதவி செய்துகாப்பாற்றி ஊர் மக்கள் அனைவரின் பாராட்டுகளை, வாழ்த்துகளையும் பெற்றுவருகிறார் வனஜா.
Tags :