குன்றக்குடி  கூட்டுறவு வங்கி செயலாளர்  தற்காலிக பணியிடை நீக்கம்

by Editor / 27-09-2021 03:12:11pm
 குன்றக்குடி  கூட்டுறவு வங்கி செயலாளர்  தற்காலிக பணியிடை நீக்கம்



சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விதிகளை மீறி நகைக்கடன் வழங்கிய குற்றச்சாட்டில் அவ்வங்கியின் செயலாளர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 5 சவரன் வரையிலான கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று. அதன்படி கூட்டுறவு வங்கிகளில் பயனாளிகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இதில் பல்வேறு ஊர்களில் ஒருவருக்கே பல லட்சம் கடன்களும், கவரிங் நகைகளை பெற்றுக்கொண்டு கடன் வழங்கிய மோசடிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அந்த வரிசையில் குன்றக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியிலும் விதிகளை மீறி நகைக்கடன் வழங்கப்பட்டதாக எழுந்த குற்றசாட்டின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. அதில் தனிநபர் நகைக்கடன் உச்சவரம்பு 20 லட்சத்திற்கும் அதிகமாக கடன் வழங்கியது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த வங்கியின் செயலாளரை தற்காலிகமாக பணியிடைநீக்கம் செய்து மத்திய கூட்டுறவு வங்கியின் மண்டல இணை பதிவாளர் மற்றும் நிர்வாக இயக்குனர் ரவிசந்திரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

 

Tags :

Share via