ஆகஸ்ட் மாதம் தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆகஸ்ட் மாதம் தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெறும் ஐம்பெரும் விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மாணவிகள் போல் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் தமிழ் புதல்வன் திட்டம். நான் பிரச்சாரத்துக்கு சென்றிருந்தபோது பலரும் புதுமைப்பெண் திட்டத்தை பாராட்டி பேசினர். அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு, ஆகஸ்ட் முதல் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கப்படும்” என கூறியுள்ளார்.
Tags :