துபாயில்கார்ரேஸ்பயிற்சி நடிகர் அஜித் கார்தடுப்பில்மோதி விபத்து.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் அடிக்கடி நேரம் கிடைக்கும் போதெல்லாம் பைக் அல்லது கார் ரைடு சென்று விடுவார். சமீபத்தில் ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற பெயரில் புதிய கார் ரேஸ் அணியை உருவாக்கி தற்போது அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கார் ரேஸிங்கில் அஜித் களமிறங்க உள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.அதன்படி கார் ரேஸிங்கில் கலந்துகொள்வதற்காக அஜித்குமார் நேற்று துபாய் சென்றார். இந்த கார் ரேஸ் வருகிற 11 மற்றும் 12-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், துபாயில் கார் ரேஸிங்கிற்கான பயிற்சியின் போது, அவர் ஓட்டிக் கொண்டிருந்த கார் ஓரமாக வைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரின் முன்பக்கம் பலத்த சேதமடைந்தது. விபத்தில் நடிகர் அஜித் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.
Tags : துபாயில்கார்ரேஸ்பயிற்சி நடிகர்அஜித் கார்தடுப்பில்மோதி விபத்து.