ஓ. பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வினுடைய கொடி, சின்னம், லெட்டர் பே ட் ஆகியவற்றை பயன்படுத்த தடை தொடரும்.

by Admin / 11-01-2024 11:12:14am
 ஓ. பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வினுடைய கொடி, சின்னம், லெட்டர் பே ட் ஆகியவற்றை பயன்படுத்த தடை தொடரும்.

அ.தி.மு.கவினுடைய கொடி, சின்னம், லெட்டர் பே ட் ஆகியவற்றை பயன்படுத்த தனிநீதிபதி நியமித்த தடையை நீக்க கோரி அ.தி.மு.க முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் முன்பு விசாரணைக்கு வந்தது .வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது அதன்படி தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பில் தலையிட முடியாது என்றும் அதிமுகவினுடைய கட்சியின் பெயர், கொடி சின்னத்தை பயன்படுத்தப்பட்ட தடை தொடரும் என்றும் கூறி ஓ.பி.எஸின் மேல் முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

 

 

Tags :

Share via

More stories