கோழிக்கோட்டில் மனோரமா நாளிதழ் இலக்கிய விழாவில் துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின்.

by Admin / 03-11-2024 01:01:14am
கோழிக்கோட்டில் மனோரமா நாளிதழ் இலக்கிய விழாவில்  துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின்.

 

கேரளா மாநில கோழிக்கோட்டில் நடைபெற்ற மனோரமா நாளிதழ் இலக்கிய விழாவில் உரையாற்றிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ,மாநிலங்கள் தங்களுடைய மொழியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .இல்லையென்றால் இந்தி இந்தியாவில் முன்னிலை பெறுவதுடன் மற்ற மொழிகளை அழித்துவிடும் என்றும் அதனால் தான் இந்தி திணைக்கப்படுவதை திராவிட இயக்கம் எதிர்ப்பு தெரிவித்தது என்றும் இந்தி மொழி மீது எந்தவித விரோதமும் கொள்ளவில்லை என்றும் இலக்கியம் மொழி மற்றும் அரசியல் நெறிமுறைகளின் இணைப்பு ஒரு சக்தி வாய்ந்த அடையாளத்தை உருவாக்குகிறது அந்த அடையாளம் தான் தமிழ்நாட்டின் சமூக அரசியல் பரப்பில் ஆழமான வடிவத்தை கொண்டுள்ளது.தமிழ்நாடு, கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களும் மிகவும் வளர்ச்சி அடைந்த மாநிலங்களாகும். இரண்டு மாநிலங்களும் பாசிச வகுப்புவாத சக்திகளை விலக்கி வைத்திருக்கின்றன என்றும் திராவிட இயக்க தலைவர்கள் மக்களுடன் இணைவதற்கு இலக்கியத்தை பயன்படுத்தினார்கள். அண்ணா, கலைஞர் ஆகியோர் இலக்கியவழி திராவிட இயக்கத்தின் அரசியல் தத்துவங்களை பொதுமக்களுக்கு புரிய வைத்ததோடு திராவிட கோட்பாட்டை எளிதாக எடுத்துச் சென்றார்கள் என்றும் அவர் கூறினார்.

கோழிக்கோட்டில் மனோரமா நாளிதழ் இலக்கிய விழாவில்  துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின்.
 

Tags :

Share via