சென்னையில் காற்றுடன் பலத்த  மழை: 

by Editor / 20-05-2021 05:09:19pm
சென்னையில் காற்றுடன் பலத்த  மழை: 



சென்னையில் பல இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இது  நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்ப சலனம் காரணமாக சென்னை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில்  காற்றுடன் மழை பெய்து வருகிறது.
அம்பத்தூர், ஆவடி, ஆதம்பாக்கம், ஆலந்தூர், அடையாறு, தரமணி, வண்டலூர், பெருங்குளத்தூர், குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.மேலும், அடுத்த 2 மணி நேரத்திற்கு காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via