பிரேசிலில் 36,862 பேர்   ஒரே நாளில் கொரோனாவால் பாதிப்பு

by Editor / 18-05-2021 04:30:17pm
பிரேசிலில் 36,862 பேர்   ஒரே நாளில்  கொரோனாவால் பாதிப்பு

 


கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 36,862 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரேசில் சுகாதாரத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ' பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 36,862 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 971 பேர் பலியாகினர். இதுவரை 1.5 கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்து 35 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் சிறு குழந்தைகள் இறப்பது கவலையாக இருப்பதாக பிரேசில் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பிரேசிலில் ஜனவரி மாதம் முதலே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இந்த நிலையில் ஏப்ரல் மாதம் தொடங்கி சற்றே குறைந்துள்ளது. பிரேசிலில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதால் பலியும் குறைந்துள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பினால் அதிக பலி ஏற்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளன. பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் இரண்டாம், மூன்றாம் அலையை எட்டியுள்ளது. இதனைத் தடுக்க தடுப்பூசி செலுத்துவதை அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன. உலகம் முழுவதும் 16 கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.14 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

 

Tags :

Share via