நடுவானில் பறந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு

சென்னையில் இருந்து அந்தமானின் போர்ட் பிளேயர் நோக்கி வெள்ளி அன்று காலை 8.40 மணியளவில் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 117 பயணிகள், 6 விமான ஊழியர்கள் உள்பட மொத்தம் 123 பேர் பயணம் செய்தனர்.
புறப்பட்டு 1 மணி நேரத்தில் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தில் தொழில்நுட்பக்கோளாறு இருப்பதை விமானி கண்டுபிடித்தார். துரிதமாக செயல்பட்ட விமானி விமானத்தை மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கே திருப்பி பத்திரமாக தரையிறக்கினார். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மாற்று விமானம் மூலம் பயணிகள் அனைவரும் அந்தமான் புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.
Tags :