ராஜேந்திர பாலாஜி உள்பட 11 அதிமுகவினர் மீது வழக்கு
சாத்தூரில் அதிமுகவினரிடையே மோதல் ஏற்பட்டதால் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உட்பட 11 பேர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.
சாத்தூரில் அதிமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது தொடர்பான புகாரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உட்பட 11 பேர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் பரப்புரைக்காக தென்காசி சென்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு சாத்தூர் அருகே அதிமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி உதயகுமார், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் உடனிருந்த நிலையில் அங்கிருந்த ஆதரவாளர் ஒருவர் திடீரென ‘ராஜேந்திர பாலாஜி ஒழிக’ என்று கோஷமிட்டார். இதனால் ராஜேந்திர பாலாஜியின் ஆதரவாளர்களுக்கும் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறி இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
சம்பவ இடத்தில் இருந்த போலீசார் இரு தரப்பினரையும் சாமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பிவைத்தனர். ஏற்கனவே விருதுநகர் மாவட்டத்தில் அதிமுகவினரிடையே உட்கட்சி பூசல் நீடிக்கிறது. இத்தகைய சூழலில் மீண்டும் அவர்கள் சண்டையிட்டுக் கொண்டால் தேர்தலில் எப்படி வெற்றி பெறுவோம் என எடப்பாடி பழனிசாமி வருத்தம் தெரிவித்தாராம்.
இந்த நிலையில், சாத்தூரில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதில் அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து அதிமுக கிளைச் செயலாளர் வீரோவு ரெட்டி சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரை அடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Tags :