உலக சுகாதார நிறுவன இயக்குனர் டெட்ரோசு ஏமன் விமான நிலைய குண்டு வீச்சில் தப்பினாா்.

உலக சுகாதார நிறுவன இயக்குனர் டெட்ரோசு அதானோம் கெப்ரேயஸ் சர்வதேச விமான நிலையத்தில் ஏமனிலிருந்து புறப்படுவதற்காக காத்திருந்தபொழுது விமான நிலையத்தில் நடந்த குண்டு வீச்சில் ஒருவர் காயமடைந்தார்.
ஏமன் சர்வதேச விமான நிலையத்தில் வியாழக்கிழமை ஈரானுடன் இணைந்த ஹதி இயக்க தொடர்புடைய பல இலக்குகளை இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்கினர். இதில் பல காயம் அடைந்ததோடு ஆறு பேர் கொல்லப் பட்டனர். ஐநாவின் விமான குழு உறுப்பினர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி தற்பொழுது மருத்துவமனையில் குணமடைந்து வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இக்குண்டு வீச்சில் உலக சுகாதார நிறுவன இயக்குனர் அதிர்ஷ்டவசமாக தப்பினார். போர்க்களம் ச் சூழலில் பிடித்துவைக்கப்பட்டுள்ள ஐநா ஊழியர்களை விடுவிப்பதற்காகவும் மனிதாபிமான நிலைமைகளை தெரிந்து மதிப்பிடுவதற்காகவும் ஏமனி டெட் ரோஸ் வருகை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Tags :