டிஎஸ்பி உட்பட 2பேருக்கு 3 ஆண்டு சிறை

by Staff / 28-10-2022 04:09:24pm
 டிஎஸ்பி உட்பட 2பேருக்கு 3 ஆண்டு சிறை

தூத்துக்குடி மாவட்டம், காசிலிங்கபுரத்தை சார்ந்த தாழ்த்தப்பட்ட விதவை பெண் பாப்பா (47) என்பவரை கடந்த 2. 11. 2017 அன்று அப்போதைய புளியம்பட்டி காவல் ஆய்வாளர் விமல்காந்த், உதவி ஆய்வாளர் காந்திமதி ஆகிய இருவரும் அடித்து தாக்கி வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தியுள்ளார். இது சம்பந்தமாக தூத்துக்குடி பி. சி. ஆர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அதிசயகுமார் என்பவரால் தனிநபர் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. இதில், விமல்காந்த், மற்றும் காந்திமதி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ. 50ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். தண்டனை வழங்கப்பட்ட விமல்காந்த் டிஎஸ்பியாகவும், ஆய்வாளர் காந்திமதி தற்போது குமரி மாவட்டத்தில் பணி செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது. பி. சி. ஆர் வழக்கில் காவல்துறை அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via

More stories