கடலூரில் கர்ப்பமாக்கி ஏமாற்றிய போலீஸ்காரர் பெண் போலீஸ் தற்கொலை.

கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த கொங்கராயனுாரை சேர்ந்தவர் சோனியா, 26. இவரும், கீழ்கவரப்பட்டை சேர்ந்த முகிலன், 27, என்பவரும் காதலித்து 2018ல் திருமணம் செய்து கொண்டனர். ஆறு வயது மகள் உள்ளார்.
திருமணமான 2வது ஆண்டில், சோனியா போலீஸ் பணிக்கு தேர்வாகி, ஆவடி போலீஸ் ஸ்டேஷனில் பணியில் சேர்ந்தார். தன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சோனியா தனியாக வசித்தார்.
இந்நிலையில், சோனியாவிற்கு ராஜூ என்ற போலீஸ்காரருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் கர்ப்பமும் ஆகியுள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ள சோனியா கூறியுள்ளார். அதற்கு ராஜூ முகிலனை விவாகரத்து செய்யும்படியும் கர்ப்பத்தை கலைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில், கர்ப்பம் கலைந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சோனியா தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, ராஜூ கைது செய்யப்பட்டார்.
Tags : கடலூரில் பெண் போலீஸ் கள்ளக்காதல் காரணமாக தற்கொலை.