கோவையில் ஆயுள் தண்டனைக் கைதி தப்பி ஓட்டம்

by Editor / 14-10-2024 12:26:01pm
கோவையில் ஆயுள் தண்டனைக் கைதி தப்பி ஓட்டம்

கோவை சிறையில் இருந்த தண்டனைக் கைதி மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என 6 நாட்கள் பரோல் விடுப்பில் சென்ற நிலையில் அவர் தப்பி ஓடியுள்ளார். ராசிபுரத்தைச் சேர்ந்த ஜெயசூர்யா (30) என்பவர் பாலியல் வன்கொடுமை வழக்கில், ஆயுள் தண்டனைப் பெற்றார். தொடர்ந்து, மனைவியின் உடல்நிலையை காரணம் காட்டி உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் பரோலில் வெளியே வந்தார். இதனையடுத்து விடுப்பில் வந்தவர், தப்பி ஓடிய நிலையில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via