மூளையை சாப்பிடும் வைரஸ்

by Staff / 27-12-2022 02:59:05pm
மூளையை சாப்பிடும் வைரஸ்

உலகம் முழுவதும் புதிய கொரோனா உருமாறிய வைரஸ் பரவ தொடங்கியுள்ள நிலையில், மனிதர்களின் மூளையை சாப்பிடும் புதிய வைரஸும் தற்போது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. Naegleria faleri என்ற பெயர் கொண்ட இந்த தொற்றுக்கு முதல் மரணம் தென் கொரியாவில் ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் 1937ம் ஆண்டு முதன்முதலில் அமெரிக்காவில் கண்டறியப்பட்டதாம். நீர் நிலைகளில் காணப்படும் இந்த வைரஸ் மனிதர்களின் மூக்கு மற்றும் வாய் வழியாக உள்ளே நுழைந்து மூளையை செயழிலக்க வைக்குமாம். இதுவரை 381 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்லதாக கூறப்படுகிறது. இந்தியாவிலும் இந்த பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் முதல் மரணம் தற்போது கொரியாவில் ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via