கல்குவாரி விவகாரம்; ஆட்சியரிடம் விவசாயி கோரிக்கை மனு

by Staff / 11-02-2025 02:43:33pm
கல்குவாரி விவகாரம்; ஆட்சியரிடம் விவசாயி கோரிக்கை மனு

மதுரை மாவட்டம் கச்சகட்டி பகுதிகளில் சட்டவிரோதமாக கல்குவாரிகள் செயல்படுவதாக தொடர்ந்து புகார் வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சமூக ஆர்வலரான ஞானசேகரன் என்பவர் மீது கல்குவாரி நடத்தியவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கல்குவாரிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இந்நிலையில் ஏற்கனவே சர்ச்சைக்குள்ளான கச்சகட்டி ஓட்டிய விவசாய பகுதிகளில் மீண்டும் 136.5 ஹெக்டர் பரப்பளவுக்கு கனிமங்களை வெட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கு முயற்சித்து வருவதால் தனது விவசாய பகுதி பாதிக்கப்படும் என கூறி கச்சகட்டி பகுதியை சேர்ந்த பழனியாண்டி என்ற விவசாயி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர்க்கூட்டத்தில் நேற்று புகார் மனு அளித்தார். 

இது குறித்து பேசிய சமூக ஆர்வலர் ஞானசேகரன்: விவசாய நிலம் அமைந்துள்ள பகுதியில் ராமமூர்த்தி கல்குவாரிக்கு உரிமம் வருவதற்கு முன்னதாக இந்த கல்குவாரியை தடை செய்ய உத்தரவிட வேண்டும், தொடர்ந்து கனிமவள கொள்ளையை தடுக்க முயற்சி செய்யும் நபர்களுக்கு தொடர்ந்து மிரட்டல் வருகிறது. அரசு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றார்.

 

Tags :

Share via