தனியார் நிதி நிறுவனத்திற்கு பூட்டு போட்ட பெண்.

சிவகங்கை அருகே முளைக்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த கணவனை இழந்த ராஜரத்தினம் என்ற பெண் சிவகங்கையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் தங்க நகையை 1இலட்சத்து 85 ஆயிரத்து 600 ரூபாய்க்கு அடமான வைத்துள்ளார் வைத்த நகையை திரும்ப பெறுவதற்காக நிதி நிறுவனத்திற்கு பணத்துடன் வந்த பெண்ணிடம் நகையை விற்று விட்டதாக நிதி நிறுவனம் கூறியதை அடுத்து அந்தப் பெண் அந்த நிதி நிறுவனத்திற்கு பூட்டு போட்டு கையில் மண்ணெண்ணெய் கேனுடன் நிதி நிறுவன வாசலில் அமர்ந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அங்கு போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.
Tags :