முன்னாள் முதல்வர் கலைஞரின் மூத்த மகன் மு, க. முத்து காலமானார்.

by Admin / 19-07-2025 12:40:51pm
முன்னாள் முதல்வர் கலைஞரின் மூத்த மகன் மு, க. முத்து  காலமானார்.

முன்னாள் முதல்வர் கலைஞரின் மூத்த மகன் திரைப்பட நடிகரும் பின்னணி பாடகருமான மு க முத்து வயது மூப்பின் காரணமாக காலமானார். திமுகவில் இருந்து எம் ஜி ஆர் விலகக்கூடிய சூழல் உருவாகிய பொழுது. அவரைப் போன்ற ஒரு திரை பிரபலத்தை உருவாக்க வேண்டும் என்று கலைஞர் கருணாநிதி தம் மகன் மு.க. முத்துவை பிள்ளையோ பிள்ளை என்கிற படத்தில் கதாநாயகனாக எம்ஜிஆரை போன்று தோற்றம், நடை ,உடை, பாவனை மூலம் மக்களிடம் அறிமுகமானார். .பிள்ளையோ பிள்ளை மக்களிடம் சென்று சேர்ந்த அளவிற்கு எம்ஜிஆர் க்கு எதிராக அவரால் திரைத்துறையில் வலுவான நிலையில் தொடர முடியவில்லை. பிள்ளையோ பிள்ளை படத்திற்கு பிறகு அவர் சமையல்காரன், இங்கும் மனிதர்கள், பூக்காரி போன்ற படங்களில் நடித்துள்ளதோடு சில படங்களுக்கு பாடல்களையும் பாடியுள்ளார். ,இவருக்கு டாக்டர் அறிவு நிதி, தேன்மொழி என மகனும் மகளும் உள்ளனர். சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை ஈச்சம்பாக்கத்தில் வசித்து வந்தார். இவரது பூத உடல் என்று கோபாலபுரம் கலைஞர் இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு மாலையில் பெசன்ட் நகர் மின்சார மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது. .முதலமைச்சர் மு,. க ஸ்டாலின் தனது மூத்த சகோதரருக்கு நேரில் அஞ்சலி செலுத்திய அதோடு கண்ணீர் மல்க தன்னுடைய தந்தை போன்று தன்மீது பாசம் காட்டியவர் என்று நெகிழ்ந்து கூறினார்.

 

முன்னாள் முதல்வர் கலைஞரின் மூத்த மகன் மு, க. முத்து  காலமானார்.
 

Tags :

Share via