காற்றாலை வயர்கள் திருட்டு கும்பல் சிக்கியது.

by Staff / 12-12-2022 05:19:34pm
காற்றாலை வயர்கள் திருட்டு  கும்பல் சிக்கியது.

தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர், பாவூர்சத்திரம், சுரண்டை, ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் காற்றாலைகள் இயங்கி வருகின்றன. அதிலும் பல இடங்களில் காற்றாலைகளில் உள்ள மின் வயர்கள் தொடர்ந்து திருடு போகும் சம்பவம் அரங்கேறி வந்தது. இதற்காக போலீஸ் தரப்பில் தனிப்படை அமைக்கப்பட்டு காற்றாலை வயர் திருட்டில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்கும் பணி  தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில்  பாவூர்சத்திரம் கேடிசி நகர் அருகே வைத்து தனிப்பிரிவு போலீசார் கூண்டு கட்டிய நிலையில் வந்த மினி டெம்போ லாரியை மடக்கி ஆய்வு செய்தனர் அப்பொழுது அதில் சென்னையைச் சேர்ந்த ஐந்து வாலிபர்கள் இருந்துள்ளனர். மேலும் லாரிக்குள் காற்றாலை மின் வயர்களை வெட்டி எடுக்கக்கூடிய ட்ரில் மெஷின்கள் கட்டிங் பிளேடுகள் ஸ்பேனர்கள் உள்ளிட்ட இரும்பு பொருட்கள் அதிக அளவில் இருந்ததும் தெரியவந்தது. உடனடியாக ஐந்து பேரையும் பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டதில் சென்னையைச் சேர்ந்த  கமலக்கண்ணன் 30,  கந்தவேல் 30, சரத்குமார் 23, கரன் 24, மணிகண்டன் 31 என்பதும் விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்து  அவர்கள் பயன்படுத்திய மினி டெம்போ லாரி மற்றும் இரும்பு பொருட்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via