சூறாவளியில் சிக்கி பறந்த கார்

by Staff / 30-04-2023 01:40:27pm
சூறாவளியில் சிக்கி பறந்த கார்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சூறாவளி புயல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நார்த் பாம் பீச் அருகே சூறாவளி வீசும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. சூறாவளி வீசிய நேரத்தில் கார்கள் சாலையில் நிறுத்தப்பட்டிருந்தன. அப்போது, சூறாவளியின் தாக்கத்தால் ஒரு கார் காற்றில் பறந்தது. அந்த கார் கீழே விழுந்து முற்றிலும் சேதமடைந்தது. இந்த காட்சிகளை மற்றொரு காரில் இருந்தவர்கள் வீடியோவாக எடுத்தனர். அதை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து பதிவிட்ட நிலையில், வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via

More stories