.24 மணி நேரத்தில் 25 பேர் பலி

by Staff / 30-04-2023 01:37:49pm
.24 மணி நேரத்தில் 25 பேர் பலி

நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 5,874 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம், கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 49,015-ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 25 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர், இதனால் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 533ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மக்கள் விழிப்புடன் இருக்கவும், முகக்கவசம் அணியவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

Tags :

Share via
Logo