by Editor /
28-06-2023
09:25:10am
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இன்று தூத்துக்குடி வந்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விமான நிலையத்தில் செய்தியாளர்களைசந்தித்தார்.பாரத பிரதமரின் அமெரிக்க பயணம் சிறப்பு வாய்ந்த பயணமாகும்- முன்பு எல்லாம் இந்தியா பல்வேறு விஷயங்களுக்காக உலக நாடுகளை நம்பி இருந்தது ஆனால் தற்போது உலக நாடுகள் இந்தியாவை எதிர்பார்த்து இருக்கின்றன எகிப்த்து நாட்டில் பிரதமர் மோடிக்கு உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்று வந்தால் வரவேற்கிறார்கள் ஆனால் பாரத பிரதமர் வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றால் விமர்சனம் செய்கிறார்கள் சென்னை பெரம்பூரில் வந்தே பாரத் ரயில் பெட்டிகள் செய்யப்பட்டு 25 ஆவது வந்தே பாரத் ரயிலுக்காக போபாலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் தென்பகுதியிலும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்பது எனது கோரிக்கை
அதே போன்று குலசேகரபட்டினம் பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது. தென் பகுதி இளைஞர்களுக்கும் மக்களுக்கும் வேலை வாய்ப்பு உருவாக்கும். என புதுச்சேரி தெலுங்கானா துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திப்பில் தெரிவித்தார்.
Tags :
Share via