விஸ்வரூபம் எடுக்கும் பெகாசஸ் விவகாரம்... உச்சநீதிமன்றம் தலையிடக் கோரி கடிதம்...
பெகாசஸ் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு தீர்வு காண கோரி 500க்கும் மேற்பட்டோர், தலைமை நீதிபதி ரமணாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இஸ்ரேலின் பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தி விஐபிக்கள் பலரது செல்போன் உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டதாக அண்மையில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிடும்படி 500க்கு மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் சமூக அமைப்புகள் தலைமை நீதிபதி ரமணாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அதில் இந்தியாவில் இந்த மென்பொருளை பயன்படுத்தவும், தகவல்களை விற்கவும், 3ம் நபருக்கு பரிமாற்றம் செய்யவும் இடைக்கால தடை விதிக்கும்படி கோரப்பட்டுள்ளது.
Tags :