ஒரே பிரசவத்தில் பிறந்த சகோதரிகள் மூவரையும் மணந்த லக்கி பாய், கலகலக்க வைத்த காரணம்
காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியில் நடைபெற்ற சிறப்புத் திருமண விழாவில், 32 வயதான லுவிசோ, நாடேஜ், நடாஷா மற்றும் நடாலி ஒரே நேரத்தில் பிறந்த மூன்று சகோதரிகளை மணந்தார். அங்குள்ளவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை திருமணம் செய்து கொள்ள சட்டப்பூர்வமாக, சுதந்திரம் உள்ளது என்று நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது. லுவிசோவின் குடும்பத்தினர் இந்த திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை.இந்த மூன்று பேரை திருமணம் செய்து கொண்டது தொடர்பாக லுவிசோவிடம் கேள்வி எழுப்பியபோது, அவர்கள் சகோதரிகள் என்பதால் நான் அனைவரையும் திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது எளிதான முடிவு அல்ல!ஏனென்றால் நான் என்ன செய்கிறேன் என்று என் பெற்றோருக்கு இது வரை புரியவில்லை என்று கூறினார்.மேலும் மூன்று சகோதரிகளில் ஒருவர், நாங்கள் சிறுவயதில் இருந்தே அனைத்தையும் பகிர்ந்து கொண்டதாகவும், அதனால் கணவனைப் பகிர்ந்துகொள்வது தங்களுக்கு கடினமான தேர்வாக இருக்கவில்லை என்றும் கூறினார்.
Tags : Lucky Boy, who married all three sisters born in the same delivery, was the reason for the uproar