விசிக கொடி கம்பம் விவகாரம்: வருவாய்த்துறை ஊழியர்கள் கொட்டும் மழையிலும் 2 நாளாக இன்று விடுப்பு எடுத்து போராட்டம்.
மதுரையில் நேற்று வருவாய்த்துறையினரின் நடத்திய முதல் நாள் ஈட்டிய விடுப்பு போராட்டத்தில் 97.6 சதவீதம் பேர் விடுப்பு எடுத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா வருவாய் நிர்வாக ஆணையருக்கு கடிதம் எழுதிய நிலையில் பேச்சுவாரத்தைக்கு கூட அழைக்காத நிலையில் 2ஆவது நாளாக நீடிக்கும் போராட்டம்
நேற்று நடைபெற்ற விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் தாசில்தார் முதல் அலுவலக உதவியாளர் வரை 660 பேர் மற்றும், 467 கிராம நிர்வாக அலுவலர்கள், 444 கிராம உதவியாளர்கள் என மாவட்டத்தில் உள்ள 1,609 வருவாய்த்துறையினரில் 1,571 பேர் போராட்டத்தில் பங்கேற்று உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா வருவாய் நிர்வாக ஆணையருக்கு கடிதம் எழுதினார்.
இந்நிலையில் 2ஆம் நாளாகவும் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் விடுப்பு எடுத்து கொட்டும் மழையிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
Tags : விசிக கொடி கம்பம் விவகாரம்: வருவாய்த்துறை ஊழியர்கள் கொட்டும் மழையிலும் 2 நாளாக இன்று விடுப்பு எடுத்து போராட்டம்.