டி.என்.பி.எஸ்.சி தோ்வு மையம் ஒதுக்கீடு அரசு நிர்வாகச்சீர்கோட்டை வெளிப்படுத்துவதாக- இ.பி.எஸ் குற்றச்சாட்டு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2a முதன்மை தேர்வு மையங்கள் ஒதுக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடிகள் திமுக அரசின் நிர்வாக சீர்கேட்டை அப்பட்டமாக வெளிப்படுத்துவதாக ஈ.பி.எஸ் குற்றம் சாட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளாா். முறையான திட்டமிடல் இன்றி ஆயிரக்கணக்கான தேர்வர்கள் பதிக்கப்பட்டுள்ளனர். தகுதியற்ற மையங்களை ஒதுக்கீடு செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மென்பொருள் பிழை காரணமாக சுமார் 600க்கும் மேற்பட்ட தேர்வர்களுக்கு தவறான மையங்கள் ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 300 பேர் மட்டுமே தேர்வு எழுதக்கூடிய மையத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அரும்பாக்கம் மற்றும் நந்தனம் போன்ற இடங்களில் தேர்வு மையங்கள் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டதாலும் போதிய ஏற்பாடுகள் இல்லாதாலும் தேர்வர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். இதன் காரணமாக நடைபெற இருந்த குரூப் 2 மற்றும் குரூப் 2a முதன்மை தேர்வு ஒத்துழைக்கப்படுவதாக அரசு தேர்வாணையம் அறிவித்துள்ளது.
Tags :


















