மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள்-
தமிழ் மொழியை காக்கும் பொருட்டு இந்தி திணைப்பை எதிர்த்து போராடி உயர்த்தியாகம் செய்த தமிழக மொழி வீரர்களை அவர்கள் தியாகங்களை நினைவு கூறும் நாள் இன்று. இந்நாளில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தம் எக்ஸ் வலைதள பதிவில்,
அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை! மொழியை உயிராய் நேசிக்கும் ஒரு மாநிலம், இந்தித் திணிப்புக்கு எதிராக ஒன்றுதிரண்டு போராடியது. திணித்த ஒவ்வொரு முறையும் அதே வீரியத்தோடு போராடியது. இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள பல்வேறு மொழிவழித் தேசிய இனங்களின் உரிமையையும் அடையாளத்தையும் காத்தது. தமிழுக்காகத் தங்கள் இன்னுயிரையே ஈந்த அந்தத் தியாகிகளை நன்றியோடு வணங்குகிறேன். மொழிப்போரில் இனி ஒரு உயிரும் போகாது; நம் தமிழுணர்வும் சாகாது! இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
Tags :















.jpg)



