மூன்றாவது அணியாக தனித்து தமிழக வெற்றி கழகம் போட்யிடப் போகிறதா....
தமிழக வெற்றி கழகத்தின் சிறப்பு செயல்வீரா்கள்குழு கூட் டம் மாமல்லபுரத்தில் இன்று தொடங்க உள்ளது. இக்கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளும் எடுக்கும் முழு அதிகாரம் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் அதிகாரப்பூர்வ முதலமைச்சர் வேட்பாளராகவும் அவர் உள்ளார். அவர் தலைமையை ஏற்க உள்ள கட்சிகள் மட்டுமே கூட்டணியில் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திமுக மற்றும் பாஜக கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்றும் அதிமுக கூட்டணி அழைப்புகளையும் அவர் நிராகரித்து இருந்த நிலையில் இப்பொழுது அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம் மற்றும் தேமுதிக போன்ற கட்சிகள் மட்டுமே எந்த கூட்டணியிலும் பங்கேற்காத நிலையில் அந்த இரு கட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல். இந்த பரபரப்பான அரசியல் சூழலில் கூட்டணி குறித்த தெளிவான முடிவுகளை தமிழக வெற்றிக்கழகம் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எந்தக் கூட்டணியும் சேர்க்காமல் மூன்றாவது அணியாக தனித்து தமிழக வெற்றி கழகம் போட்டியிடப் போகிறதா என்பதையும் இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது.
Tags :
















.jpg)


