சிறப்பு தீவிர திருத்த பணி மூலம் வாக்குத்திருட்டை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டி ராகுல் காந்தி

by Admin / 25-01-2026 01:29:22am
சிறப்பு தீவிர திருத்த பணி மூலம் வாக்குத்திருட்டை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டி ராகுல் காந்தி

பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல்களை திருத்துவதற்காக மேற்கொள்ளும் சிறப்பு தீவிர திருத்த பணி மூலம் வாக்குத்திருட்டை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். ராகுல் காந்தி வெளியிட்ட சமூக வலைதள பதிவில் தேர்தல் ஆணையம் ஜனநாயகத்தின் பாதுகாவலராக செயல்படுவதற்கு பதிலாக வாக்கு திருட்டு சபையில் ஒரு முக்கிய பங்காளியாக மாறிவிட்டதாக கூறினார். குறிப்பாக ,குஜராத்தில் எஸ்ஐஆர் என்ற பெயரில் வாக்காளர் பட்டியல்களில் திட்டமிடப்பட்ட முறைகேடுகள் நடப்பதாக அவர் சுட்டிக் காட்டினார் .ஜனவரி 18ஆம் தேதி வரை மட்டுமே ஆட்சி பணிகளை தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்பட்ட நிலையில் கடைசி சில நாட்களில் லட்சக்கணக்கான ஆட்சியபனைகள் தாக்கல் செய்யப்பட்டதாகவும் இவை குறிப்பிட்ட சமூகத்தினரின் பெயர்களை நீக்க பயன்படுத்தப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். எஸ். ஐ. ஆர் என்பது நிர்வாக ரீதியான திருத்த பணியாக இல்லாமல் ஒருவருக்கு ஒரு வாக்கு என்ற அரசியல் அமைப்பு உரிமையை சிதைக்கும் கருவியாக மாற்றப்பட்டுள்ளது .எதிர்கட்சிகள் வலுவாக உள்ள தொகுதிகள் மற்றும் குறிப்பிட்ட சமூக மக்கள் வசிக்கும் பகுதிகளில் வாக்காளர் பெயர்கள் திட்டமிட்டு நீக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார் .எஸ். ஐ .ஆர் எங்கு இருக்கிறதோ அங்கு வாக்கு திருட்டு நடக்கிறது என்று அவர் கடுமையாக சாடினார். ராகுல் காந்தி கடந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலே கர்நாடகா ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் இதே போன்ற வாக்கு திருட்டு புகார்களை முன்வைத்து வருகிறார். இந்திய தேர்தல் ஆணையம் இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக மறுத்து வருவதுடன் ஆதாரங்கள் இருந்தால் முறையான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு ராகுல் காந்திக்கு கோரிக்கை வைத்துள்ளது.

 

Tags :

Share via