திருச்சியில் நடந்த பஸ் விபத்தில் இருவர் மரணம்

by Staff / 02-04-2024 11:08:32am
திருச்சியில் நடந்த பஸ் விபத்தில் இருவர் மரணம்

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை பால்பண்ணை அருகே உள்ள மேம்பாலத்தில் சென்னையிலிருந்து கம்பம் நோக்கி 34 நபர்களுடன் சென்ற தனியார் ஆம்னி பேருந்து முன்னே தர்மபுரியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி செங்கல் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மோதியது. இதில், பேருந்து ஓட்டுநரான சந்திரன் மற்றும் பேரனுடன் பயணித்த மூதாட்டி பழனியம்மாள் என இருவர் உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினார்.படுகாயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். விபத்து குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories