பெண்ணின் தலையில் பாய்ந்த துப்பாக்கி குண்டு..

by Staff / 09-12-2023 01:04:10pm
பெண்ணின் தலையில் பாய்ந்த துப்பாக்கி குண்டு..

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர் மாவட்டத்தில் பாஸ்போர்ட் சரிபார்ப்புக்காக காவல் நிலையம் சென்ற பெண்ணின் தலையில் காவல் ஆய்வாளர் தவறுதலாக துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவலர் ஒருவரிடம் இருந்து துப்பாக்கியை பெற்று, ஆய்வாளர் மனோஜ் ஷர்மா அதனை சரிபார்க்கும்போது பெண்ணின் தலையில் குண்டு பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்த அப்பெண், கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில், மனோஜ் மீது வழக்குப்பதிவு செய்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

 

Tags :

Share via

More stories