இந்தியாவில் 5 மாதங்களுக்குப் பின் கொரோனா உச்சம்

by Staff / 26-03-2023 05:07:30pm
இந்தியாவில் 5 மாதங்களுக்குப் பின் கொரோனா உச்சம்

நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் 1,890 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏறக்குறைய ஐந்து மாதங்களுக்குப் பிறகு, அதாவது 149 நாட்களுக்குப் பிறகு இந்தியாவில் ஒரே நாளில் இத்தனை பாதிப்புகள் ஏற்படுவது இதுவே முதல்முறை. கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை 5,30,831 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 4.47 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo