அதிக போதை தர மதுவில் ஊமத்தங்காய் கலப்படம் செய்த வாலிபர் கைது

வீரகனூர் அருகே கிழக்கு ராஜபாளையம் பகுதியில் மதுவில் அதிக போதை ஏறுவதற்காக ஊமத்தங்காய் கலந்து விற்பனை செய்யப்படுவதாக ஆத்தூர் டிஎஸ்பி நாகராஜனுக்கு புகார் வந்தது. இதன்பேரில் எஸ்ஐ அந்தோணி மைக்கேல் மற்றும் போலீசார் கிழக்கு ராஜபாளையம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஏரிக்கரை அருகில் நின்று கொண்டிருந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது மது பாட்டில்களில் அதிக போதை தர ஊமத்தங்காய் கலந்து விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது இதையடுத்து மதுபானங்களை போலீசார் பறிமுதல் செய்து ஆத்தூர் அருகே மணிவிழுந்தான் ராமசேஷபுரத்தைச் சேர்ந்த நவீன் (24 வயது) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Tags :