விஷம் கொடுத்து 3 குழந்தைகள் பலி.. பெற்றோர் தற்கொலை முயற்சி

by Editor / 14-06-2025 02:56:53pm
விஷம் கொடுத்து 3 குழந்தைகள் பலி.. பெற்றோர் தற்கொலை முயற்சி

சத்தீஸ்கர் மாநிலம் கான்கர் மாவட்டத்தில் இன்று (ஜூன் 14) ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விஷம் குடித்ததில் 3 குழந்தைகள் உயிரிழந்தன. தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில், குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாங்களும் விஷம் குடித்தனர். இதில், வர்ஷா பைராகி (11), தீப்தி பைராகி (7), மற்றும் தேவ்ராஜ் பைராகி (5) ஆகிய மூன்று குழந்தைகள் இறந்த நிலையில், பெற்றோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via