ரம்ஜான் பரிசுப் பொருள் வாங்க குவிந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 85 பேர் பலி...?

by Editor / 21-04-2023 07:20:58am
ரம்ஜான் பரிசுப் பொருள் வாங்க குவிந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 85 பேர் பலி...?

ஏமனில் ரம்ஜான் பரிசுப் பொருள் வாங்க குவிந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 85 பேர் பலியாகியுள்ளனர். அரேபிய தீபகற்ப நாடான ஏமனில் உள்நாட்டுப் போர் காரணமாக கடும் பொருளாதார நெருக்கடியில் மக்கள் கடும் வறுமையில் உள்ளனர். இந்நிலையில், ரம்ஜானை முன்னிட்டு ஏமன் சானா நகரில் உள்ள ஒரு பள்ளியில்5 ஆயிரம் ரியால் மதிப்புள்ள பணம், பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் முண்டியடித்துக் கொண்டு உள்ளே நுழைந்துள்ள நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags : 85 people, including children and women, died in the rush to buy Ramzan gifts...?

Share via