ஜெயில் பயத்தில் அமைச்சர்கள் கோவில் கோவிலாக போகின்றனர் அண்ணாமலை

by Staff / 28-11-2023 03:28:17pm
ஜெயில் பயத்தில் அமைச்சர்கள் கோவில் கோவிலாக போகின்றனர் அண்ணாமலை

ஜெயிலுக்கு சென்று விடுவோம் என்ற பயத்தில் திமுக அமைச்சர்கள் கோவில் கோவிலாக சுற்றி வருவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். தஞ்சையில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில்; மக்களவைத் தேர்தலுக்கு பின், தமிழகத்தில் உள்ள 35 அமைச்சர்களில், எத்தனை பேர் வெளியே இருப்பார்கள் என தெரியாது. 11 திமுக அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் இன்னும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. சனாதனத்தை நம்பாத அமைச்சர்கள் எல்லாம், எப்போது ஜெயிலுக்கு போவோம் என்ற பயத்தில், கோவில் கோவிலாக போகின்றனர்" என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via
Logo