கார்கேவின் இல்லத்திற்கு வந்து ராகுலை சந்தித்த சரத் பவார்

மகாராஷ்டிராவின் மூத்த அரசியல்வாதியும், என்சிபி தலைவருமான சரத் பவார் வியாழன் மாலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோரை சந்தித்தார். டெல்லியில் உள்ள கார்கேவின் வீட்டில் காங்கிரஸ் தலைவர்களை சரத் பவார் சந்தித்தார். இன்று நாட்டில் நடக்கும் சம்பவங்கள், நாட்டை காப்பாற்ற, ஜனநாயகத்தை காப்பாற்ற, அரசியலமைப்பு மற்றும் பேச்சு சுதந்திரத்தை பாதுகாக்க, அரசு நிறுவனங்களை தவறாக பயன்படுத்துதல், இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கான பணவீக்கம் போன்ற பிரச்னைகளில், போராட நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
Tags :