இளம்பெண்களை ஏமாற்றிய பாஜக நிர்வாகி கைது.

by Editor / 10-02-2025 03:47:51pm
இளம்பெண்களை ஏமாற்றிய பாஜக நிர்வாகி கைது.

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரில் பல இளம்பெண்களை ஏமாற்றிய பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். சட்டக்கல்லூரியில் படிக்கும் மாவட்ட பாஜக இளைஞர் அணி செயலாளர் தமிழரசன், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்களிடம் நகை, பணம் பறித்து வந்துள்ளார். பெண்களை காதல்வலையில் வீழ்த்தி மோசடி செய்ததோடு அவர்களை மிரட்டியும் வந்துள்ளார். இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் தமிழரசன் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Tags : இளம்பெண்களை ஏமாற்றிய பாஜக நிர்வாகி கைது

Share via