செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி. வரிவசூல் ரூ. 1.17 லட்சம் கோடி

by Editor / 01-10-2021 08:34:37pm
செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி. வரிவசூல் ரூ. 1.17 லட்சம் கோடி

இந்தியாவின் சேவை மற்றும் சரக்கு வரிகள் மூலம்  மொத்த வருவாயாக  1 கோடியே 17 லட்சத்து 10 ரூபாய் கிடைத்துள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது செப்டம்பர் மாதத்துக்கான வருவாய் மட்டுமே.இதில் மத்திய ஜி.எஸ்.டி.யாக 20 ஆயிரத்து 578 கோடி ரூபாயும்,  மாநில ஜி.எஸ்.டி.யாக 26 ஆயிரத்து 767 கோடி ரூபாயும்,  ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.யாக (29 ஆயிரத்து 555 கோடி ரூபாய் சரக்குகள் இறக்குமதியையும் சேர்த்து) 60 ஆயிரத்து 91 கோடி ரூபாயும் ,  செஸ் வரியாக (623 கோடி ரூபாய்  சரக்குகள் இறக்குமதியையும் சேர்த்து)  8 ஆயிரத்து 754 கோடி ரூபாயும் வருவாய் கிடைத்துள்ளது.இதன் மூலமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகமாக மீண்டு வருவது தெரிகிறது என்று கூறப்பட்டுள்ளது.வரி ஏய்ப்பு செய்வது மற்றும் போலியாக கணக்குகள் காட்டுவது போன்றவற்றுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக ஜி.எஸ்.டி. வரி வசூல் உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைப்போல இரண்டாவது அரையாண்டுக்கான காலகட்டத்தில் இதைவிட அதிகமாக வரி வசூல் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக  நிதி அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு மாநில ஜி.எஸ்.டி.க்கு 28 ஆயிரத்து 812 கோடி ரூபாயும், மத்திய ஜி.எஸ்.டி.க்கு 24 ஆயிரத்து 140 ரூபாயும் தீர்வுத்தொகையாக கொடுத்துள்ளது.இதன்மூலம்,  மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு  செப்டம்பர் மாதத்துக்கான மொத்த வருவாயாக  49 ஆயிரத்து 390 கோடி ரூபாய் மத்திய ஜி.எஸ்.டி.க்கும்,  50 ஆயிரத்து 907 கோடி ரூபாய் மாநில ஜி.எஸ்.டி.க்கும் கிடைத்துள்ளது.கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வரி வருவாயைக் காட்டிலும் இந்தாண்டு 23 சதவீதம் அதிகமாக ஜி.எஸ்.டி. கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

சரக்குகள் இறக்குமதி மூலம் கிடைத்த ஜி.எஸ்.டி. வசூல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தை விட 30 சதவீதம் அதிகரித்துள்ளது. அதைப்போல, உள்நாட்டு வியாபாரம் மூலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தை விட இந்த ஆண்டு செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி. வசூல்   20 சதவீதம் அதிகமாக கிடைத்துள்ளது.ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையாக 22 ஆயிரம் கோடி ரூபாய் மாநிலங்களுக்கு மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via