திமுக முன்னாள் எம்.எல்.ஏ வீரபாண்டி ராஜா மறைவு-முதல்வர் இரங்கல்.

by Editor / 02-10-2021 10:37:40am
திமுக முன்னாள் எம்.எல்.ஏ வீரபாண்டி ராஜா மறைவு-முதல்வர் இரங்கல்.

திமுகவின் தேர்தல் பணிக்குழு மாநிலச் செயலாளர் வீரபாண்டி ராஜா. இவர் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ஆவார். மேலும் வீரபாண்டி சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏ இன்று அக்டோபர் 2ம் தேதி வீரபாண்டி ராஜாவின் பிறந்தநாள் . வீரபாண்டி ராஜா பிறந்தநாளை யொட்டி தந்தையின் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு வீடு திரும்பிய நிலையில் மயங்கி விழுந்த அவர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

வீரபாண்டி ராஜா மரணம் திமுக தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்இதுகுறித்து, அருமைச் சகோதரர் வீரபாண்டி இராஜா அவர்கள். இனிமையாய் பழகியும் அருமையான குணத்தாலும் அனைவரையும் ஈர்க்கும் பண்பு கொண்டவர் இராஜா. எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் அதனைத் திறம்பட செய்து முடிக்கக் கூடியவர். அனைவரையும் ஈர்க்கும் பண்பு கொண்டவர் இராஜா. வீரபாண்டி இராஜா போன்றோர் மறைவு தனிமனித மறைவு அல்ல, தூண் சாய்வது போல! இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories