அரசு மருத்துவமனைகளில் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதம்
திருவாரூர் அரசு மருத்துவமனையில் பாம்பு கடித்து சிகிச்சையில் இருந்த நபர் உயிரிழந்த நிலையில் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாம்பு கடித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாகையை சேர்ந்த நெடுமாறனுக்கு டயாலிசிஸ் செய்யும் சிகிச்சையும் பாம்பு கடித்த இடத்தில் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இந்தநிலையில் அதிகாலையில் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு நெடுமாறன் உயிரிழந்தார். பயிற்சி மருத்துவர்களை கொண்டு தவறான சிகிச்சை அளித்ததால் நெடுமாறன் உயிரிழந்ததாக குற்றம் சாட்டி அவரது தங்கை வீடியோ வெளியிட்டார். இதுகுறித்து விளக்கம் அளித்த மருத்துவமனை டீன் நெடுமாறனுக்கு ஏற்கனவே சிறுநீரகம் செயலிழந்த தாகவும் அதனாலே அவர் உயிரிழந்ததாகவும் கூறினர்.
Tags :



















