நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வ செயலை செய்யுங்கள் : மோடி

by Staff / 05-12-2023 12:00:38pm
நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வ செயலை செய்யுங்கள் : மோடி

நாடாளுமன்றத்தில், ஆக்கப்பூர்வ செயல்களை செய்யுங்கள் என்று, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். 5 மாநில தேர்தலில் பாஜக 3, காங்கிரஸ் 1, மிசோரத்தில் மாநிலக் கட்சி என ஆட்சியை பிடித்தன. இந்த நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. இதனால், அதில் பங்கேற்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில், தேர்தல் தோல்வியை வெளிப்படுத்தாமல், ஆக்கப்பூர்வ செயல்களை செய்யுமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Tags :

Share via