ஆர்.கே சுரேஷ் வங்கி கணக்குகள் முடக்கம்

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகாததால் பாஜக நிர்வாகியியும் நடிகருமான ஆர்கே சுரேஷ் வங்கி கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர். ஆர்கே சுரேஷ் வெளிநாட்டில் தலைமுறைவாக இருந்து வரும் நிலையில் ஏற்கனவே பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். சென்னை அமைந்த கரையை தலைமை இடமாகக் கொண்ட ஆருத்ரா கோல்ட் நிறுவனம் ரூபாய் 2438 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் உட்பட 21 பேர் மீது வழக்கு பதிவு செய்திருந்தது.
Tags :