விஜய பிரபாகரன் வீழ்த்தப்படவில்லை, தோற்கடிக்கப்பட்டார் - பிரேமலதா
விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் வீழ்த்தப்படவில்லை, தோற்கடிக்கப்பட்டிருக்கிறார் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டின் இன்று (ஜுன் 6) செய்தியாளர்களை சந்தித்த அவர், மிக மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தான் விஜய பிரபாகரன் தோல்வி அடைந்தார். விஜய பிரபாகரன் திட்டமிட்ட சூழ்ச்சியால்தான் வீழ்த்தப்பட்டிருக்கிறார் என கூறினார். மதுரையைச் சேர்ந்த ஒரு திமுக அமைச்சர் விருதுநகருக்கு சென்று அங்கு தனது பலத்தை காட்டி சதி செய்து விஜய பிரபாகரனை தோற்கடிக்கச் செய்துள்ளார் என குற்றம்சாட்டியுள்ளார்.
Tags :