காட்டில் சிக்கிய சிறுமிகளை காப்பாற்றிய ஐபோன்

by Staff / 01-02-2023 11:22:27am
காட்டில் சிக்கிய சிறுமிகளை காப்பாற்றிய ஐபோன்

சமீபத்தில், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில், இரண்டு சிறுமிகள் தங்கள் காரில் கூகுள் மேப்பைப் பார்த்துக் கொண்டிருந்தபோது வழி தவறி மெக்பிரைட் காட்டுக்குள் சென்றுள்ளனர். குடும்பத்தினரை அழைக்க முயன்றபோது, சிக்னல் இல்லை. அதே நேரத்தில், ஒரு பெண் தனது ஐபோன் 14 இல் உள்ள செயற்கைக்கோள் இணைப்பு அம்சத்தை பயன்படுத்தி, SOS சேவைக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினார். இதன் மூலம் ஐபோனில் உள்ள ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் இருவரும் சிக்கியுள்ள இடத்தை கண்காணித்து மீட்புக் குழுவினர் இருவரையும் காப்பாற்றினர்.

 

Tags :

Share via