இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூசபரிமலைக்கு இருமுடி கட்டி கருப்பு புடவை அணிந்து 18 படிகளில் ஏறி தன்னுடைய வழிபாட்டை நிகழ்த்தினார்

by Admin / 22-10-2025 12:59:33pm
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூசபரிமலைக்கு இருமுடி கட்டி கருப்பு புடவை அணிந்து 18 படிகளில் ஏறி தன்னுடைய வழிபாட்டை நிகழ்த்தினார்

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ நான்கு நாள் பயணமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பொருட்டு கேரள மாநிலத்திற்கு நேற்று வருகை புரிந்திருந்தார். இன்று ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரத்திலிருந்து .காலை, பம்பாவுக்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கியபோது, ஹெலிபேடின் தார்ச்சாலையில் ஏற்பட்ட சிறு பள்ளத்தில் ஹெலிகாப்டரின் சக்கரம் சிக்கியது. எனினும், சாலை மார்க்கமாகப் பயணம் செய்தாா் .பம்பை வந்தடைந்து சபரிமலைக்கு இருமுடி கட்டி கருப்பு புடவை அணிந்து 18 படிகளில் ஏறி தன்னுடைய வழிபாட்டை நிகழ்த்தினார். தேவஸ்தான குருமார்கள் அவருக்கு ஐயப்பன் கோவில் பிரசாதத்தை வழங்கினர்.

 நாளை..அக்டோபர் 23 அன்று ராஜ்பவனில் முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணனின் சிலையைத் திறந்துவைக்கிறாா்.. அதன்பின், சிவகிரியில் நடைபெறும் ஸ்ரீ நாராயண குரு மகாசமாதி நிகழ்வில் கலந்துகொள்வாா்..    நாளை மறுநாள், அக்டோபர் 24-ந்தேதி: பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்புகிறாா்.

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூசபரிமலைக்கு இருமுடி கட்டி கருப்பு புடவை அணிந்து 18 படிகளில் ஏறி தன்னுடைய வழிபாட்டை நிகழ்த்தினார்
 
Tags :

Share via

More stories

Logo